459. ராஜ் தாக்கரே என்கிற பாசிச அரக்கன்
மகாராட்டிர நவநிர்மாண் சேனா (MNS) என்கிற அராஜக/பாசிச அமைப்பின் தலைவனாக, மகாராட்டிர மாநிலத்தில் வாழ்ந்து வரும் பிற மாநிலத்தவரை கடந்த பல மாதங்களாக அச்சுறுத்தியும், அவர்கள் மீது வன்முறையைத் தூண்டி விட்டும் அரசியல் லாபம் தேடி வரும் ராஜ் தாக்கரேக்கு இப்போது மறை சுத்தமாக மறை கழண்டு விட்டது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது !
சமீபத்தில், மும்பையில் ரயில்வே பணிக்கு தேர்வு எழுத வந்த பிற மாநிலத்தவரை MNS குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய அரசு ஆலோசித்தபோது, "என்னை கைது செய்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்" என்றும், "என்னைக் கைது செய்தால், மகாராட்டிரமே பற்றி எரியும்" என்றும் ராஜ் தாக்கரே பிதற்றியுள்ளது! மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில், மகாராட்டிர கொங்கனில் நிலங்களை மராத்தியர் அல்லாதவர்களுக்கு விற்க வேண்டாம் என்றும் அந்த அரை லூசு பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது :(
இன்று ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மும்பையில் வன்முறை வெடித்துள்ளது. MNS குண்டர்கள் தூண்டி விடும் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் தான், அரசியல் லாபத்துக்காக பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் கருவிகளாக பயன்படுத்த விழையும் போக்குக்கு சாவுமணி அடிக்க முடியும்; சிலபல அரசியல்வியாதிகளுக்கும் பாடமாக அமையும்.
ஒரு எழவுக்கும் லாயக்கிலாத ராஜ் தாக்கரே போன்ற அரசியல்வியாதிகளுக்கு வேண்டாத விளம்பரம் தந்து, அவர்களின் உருப்படாத பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் கட்டுப்படுத்த இயலா அரக்கர்களாக உருவெடுப்பதற்கு மீடியாவின் sensational journalism அணுகுமுறையும் ஒரு மிக முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. சமீபத்தில் அமிதாப் சாதாரண அப்பண்டிசிட்டிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றதை நேரடி ஒளிபரப்பு செய்து மீடியா அடித்த அருவருப்பான கூத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் :(
ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் !!
என்றென்றும் அன்புடன்
பாலா
6 மறுமொழிகள்:
//சமீபத்தில் அமிதாப் சாதாரண அப்பண்டிசிட்டிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றதை நேரடி ஒளிபரப்பு செய்து மீடியா அடித்த அருவருப்பான கூத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் :(//
இந்த் செய்தி சேனல்கள் அடிக்கும் கூத்து அளவு கடந்து சென்று கொண்டிருப்பது உண்மை
அப்பெண்டிசைட்டில் (appendicitis) என்பது அப்பெண்டிக்சின் (appendix) அழற்சி
How to make Channels more responsible? Tiresome TV programmes do not entertain, but numb the mind.
Aptly written blog.
இந்த வெறியர்கள் சட்டத்தின் ஓட்டை மூலம் கோர்ட்டின் பிடியிலிருந்து தப்பி விடுவது மிகவும் வருந்த வேண்டிய விழயம்.
கோபாலன்
The bad old days of the sixties will be repeated I am afraid, this time by the nephew of the old trouble maker.
Dondu N. Raghavan
Today once again, he is made a hero, and we are shown repeatedly his day!
How tiresome!
டாக்டர், வெற்றிமகள், டோ ண்டு சார், mayakunar,
கருத்துக்கு நன்றி.
ஒரு விஷயம், ராஜ் தாக்கரே போன்ற பாசிசவாதிகளையும் (ஏதாவது குண்டக்க மண்டக்க காரணங்களைக் காட்டி -- இந்தி ஆதிக்கம் ஒரு எடுத்துக்காட்டு!)ஆதரிக்கற "அறிவுஜீவி" சென்மங்கள் இங்கு உலவிக் கொண்டு தான் இருக்கின்றன :(
Post a Comment